இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ள, 'ஆர் ஆர் ஆர்' படத்தில் இருந்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியான, நாட்டு கூத்து தமிழ் லிரிக்கல் பாடலை விஜய் மற்றும் விஷால் பட பாடல்களுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். 

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ள, 'ஆர் ஆர் ஆர்' படத்தில் இருந்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியான, நாட்டு கூத்து தமிழ் லிரிக்கல் பாடலை விஜய் மற்றும் விஷால் பட பாடல்களுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரபாஸ் மற்றும் ராணாவை வைத்து 'பாகுபலி' படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வெற்றி கண்ட பின்னர், தற்போது 'ஆர் ஆர் ஆர்' படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பிரபல தெலுங்கு நடிகர்களான ராம்சரன், மற்றும் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடித்து வருகிறார்கள்.

மேலும் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி, ராகுல் ராமகிருஷ்ணா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 'பாகுபலி' படத்திற்கு பின் மீண்டும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பில் சற்று தாமதம் ஏற்பட்டாலும், பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தி முடிக்கப்பட்டது.

அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இப்படத்தை, ஜனவரி 7ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதே நேரம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் வண்ணமாக அவ்வப்போது, இந்த அப்டேட் மற்றும் லிரிக்கல் பாடல்கள், glimpse வீடியோக்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே நட்பை பறைசாற்றும் விதமாக கீரவாணி இசையில், அனிருத் பாடிய நாட்டு 'நட்பு' லிரிக்கல் பாடல் வெளியான நிலையில், அதை தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதி ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடனமாடிய 'நாட்டுக் கூத்து' பாடல் வெளியானது

.

இந்தப் பாடலில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து தங்களது நடனத் திறமையை வேற லெவலுக்கு வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து உள்ள இந்த பாடலுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர் போல் நடனமாடி அதனை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டு வருகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க இந்த பாடல் நடிகர் விஜய் நடித்த படத்திலிருந்தும், விஷால் நடித்த படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். "நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக பாடல் படத்தில்... "நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட... தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட" என்கிற பாடலையும், விஷால் நடித்த படத்தில் இடம் பெற்ற "பனை மரமா நான் இருக்கேன்... கல் இறக்க நீ வாரியா? ஆகிய பாடல்கள் கேட்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், நாட்டு கூத்து தமிழ் வெர்ஷன் இந்த பாடல்களின் காப்பி என்பதை கண்டு பிடித்து ட்ரோல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.