பல பிரபலங்கள் குழந்தையாக இருந்த போதும், இப்போது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அப்படி தான், தற்போது இருக்கிறார்பிரபல  நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

குழந்தையாக இருக்கும் போது, கொழு கொழுவென இருந்த இவர் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு, செம ஸ்லிம்மாக மாறி நடித்து வருகிறார்.

இவர் தமிழில் அறிமுகமான 'தடையரை தாக்க' படம் இவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் நடித்து வெளியான புத்தகம், என்னமோ எதோ, ஆகிய படங்களும் தொடர்ந்து தோல்வியடையவே... இவர் ராசி இல்லாத நடிகை என ஒதுக்கப்பட்டார்.

தமிழ் திரையுலகம் இவரை கை விட்டாலும், தெலுங்கு திரையுலகம் இவருக்கு கை கொடுத்தது. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்த படங்கள், தொடர்ந்து வெற்றி பெற்றதால், முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின் இவர் தமிழில் நடித்த ' தீரன் அதிகாரம் ஒன்று' வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் கார்த்தியுடன் இணைந்து, நடித்த 'தேவ்' கலவையான விமர்சனங்களை பெற்றது. சூர்யாவுடன் நடித்த 'NGK ' திரைப்படமும் இவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

எனினும் தற்போது தமிழிலும் ரகுல் ப்ரீத் சிங் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் மற்றும் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாக உள்ள இந்தியன் 2 ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.