தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும், முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். ஆரம்பத்தில் இவர் தமிழில் நடித்த  'தடையரை தாக்க', 'புத்தகம்' , 'என்னமோ எதோ' ஆகிய படங்கள் இவருக்கு  கை கொடுக்க வில்லை என்றாலும், இப்போது தமிழிலும் கலக்கி வருகிறார்.

ஏற்கனவே இவர் கார்த்தி ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் கார்த்தியுடன் இணைத்து இவர்  நடித்துள்ள 'தேவ்' படம் காதலர் தின ஸ்பேஷலாக நாளை வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், அவருடைய வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத பல சம்பவங்கள் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த வகையில், ஒருமுறை லண்டனில் `மிஷேலின் ஸ்டார்' என்கிற ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு நண்பர்களுடன் சாப்பிட சென்றாராம். அங்கு சாப்பிட்டபின் பில் மட்டும் ரூ. 10 லட்சம் வர அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கி விட்டார்களாம். காரணம் 7 பேருக்கு மட்டும் ஒரு வேளைக்கு 10 லட்சம் பில் போட்டு விட்டார்களாம். எனவே அந்த ஹோட்டலுக்கு மட்டும் இனி சாப்பிடவே போக கூடாது என அதிரடி முடிவெடுத்து விட்டாராம் ரகுல். இதனை மிகவும் காமெடியாக கூறியுள்ளார்.