Rakul Preet Singh said I will not Like act in LipLock kissing scenes but need for story i will act
தமிழில் ‘தடையறத்தாக்க’ படம் மூலம் அறிமுகமான ரகுல் ப்ரீத்சிங் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் மார்க்கெட் இல்லாமல் தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கு பக்கம் அவர் போன நேரம் சமந்தா தமிழில் பிசியாக இருந்ததால் அவருக்கான புதிய படங்களை வேகவேகமாக கைப்பற்றி தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார் ரகுல். இப்போது அவரது கால்சீட்டுக்காக முன்னணி தெலுங்கு ஹீரோக்களே காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மேலும், ரகுல் ப்ரீத்சிங் தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் ஸ்பைடர் படத்தில் நடித்துள்ளார். கார்த்தி நடிக்கும் 'தீரன் அதிகாரம்' ஒன்று படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். 'சினிமா படப்பிடிப்பு அரங்குகள் எனக்கு பள்ளிக்கூடம் மாதிரி இருக்கிறது. தினமும் ஒரு மாணவி போலவே வந்து நடித்து விட்டுப்போகிறேன். தினமும் புதுப் புது விஷயங்களையும் கற்றுக்கொள்கிறேன்.
.jpg)
வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் கடுமையாக உழைப்பைக் கொடுக்கிறேன். கவர்ச்சியையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. நடிகைகள் கவர்ச்சியாக தோன்றினால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். கவர்ச்சி உடையில் நடிகைகளை தேவதைகள் போல் பார்க்க முடியும். முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு அல்ல. கதைக்கு தேவை என்றால் நான் முத்தக்காட்சிகளில் தாராளமாக நடிப்பேன். ஆனால் அந்தக் காட்சி ஆபாசமாக இருக்கக் கூடாது.
சிலர் படங்களை விளம்பரப்படுத்துவதற்காக முத்தக் காட்சிகளை திணித்து படங்கள் எடுக்கிறார்கள். அதுபோன்ற முத்தக்காட்சிகளில் நான் நடிக்கமாட்டேன்.கதைகளை நானே தேர்வு செய்கிறேன். நல்ல கதைகளாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன். சினிமா எனக்கு நிறைய கொடுத்து இருக்கிறது. இங்கு எதையும் இழந்து விடவில்லை. சிலர் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டு நடிக்காமல் இழுத்தடிப்பதாக புகார்கள் வருகின்றன.
.jpg)
நான் அப்படி செய்ய மாட்டேன் வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படுவது இல்லை. ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு எல்லாருமே பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த படம் வெற்றி பெறும், இது தோல்வி அடையும் என்று எவராலும் கணிக்க முடியாது. எனவே எல்லாப் படங்களுக்கு ஒரே மாதிரியான ஒத்துழைப்பை தருகிறேன்.' என்று கூறியுள்ளார்.
