தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் தமிழில் கடைசியாக நடித்த 'தேவ்' படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படங்களில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இவர் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ள, 'என்.ஜி.கே' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் இவர் பாலிவுட் திரையுலகிலும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். 'De De Piyar De ' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், நடிகர் அஜய் தேவ்கனை காதலிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதாவது 24 வயதாகும் ரகுல் ப்ரீத் சிங்' 50 வயதுள்ள ஒருவரை காதலிக்கிறார். பின் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த படம் காமெடியாக உருவாகியுள்ளது. இந்த படம் வரும் மே மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

தற்போது இந்த படத்தில் ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.