Rakhi Sawant In Trouble Again Over Valmiki Remarks Arrest Warrant Issued

'ஹாட்டுன்னா காட்டு அப்படி ஒரு ஹாட்டு' பாலிவுட்டையே தனது படுபயங்கர கவர்ச்சியால் கட்டிப்போட்ட கனவுக்கன்னி என்றல் அது நம்ம பக்கத்து நாட்டு ராக்கி சாவந்த். இவர் நடித்த படங்களை விட சர்ச்சையில் சிக்கியது தான் அதிகம். சன்னி லியோனுக்கு எப்போதுமே டப் கொடுப்பவர் நம்ம ராக்கி சாவந்த் தான்.

கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராக்கி சாவந்த் ராமாயணம் எழுதிய வால்மீகி குறித்து ஆபாசமான சர்ச்சை கருத்தைக் கூறி இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியதாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த நரிந்தர் ஆதியா என்பவர் வழக்கு தொடர்ந்தார். 

அந்த வழக்கு மனுவில் வால்மீகி சமூகத்துக்கு எதிராகவும் இந்து மதத்தை புண் படுத்தும் வகையிலும் நடிகை ராக்கி சாவந்த் பேசி வருவதாக தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கு குறித்து லூதியானா நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை ராக்கி சாவந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து ராக்கி சாவந்த் தவிர்த்து வந்த நிலையில் மீண்டும் நடிகை ராக்கி சாவந்திற்கு லூதியானா நீதிமன்றம் ஜாமீனில் வர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.