அளவுக்கு அதிகமாக செக்ஸ் சமாச்சாரங்கள் அலசி ஆராயப்பட்டுள்ளன. சமூகத்தின் நெகடிவ் சைடை இப்படியா ஃபோகஸ் பண்ணிக் காட்டுவது என்று பொள்ளாச்சி டைப் போராளிகளால் பொங்கப்பட்ட ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை, ரிலீஸாகி ஒருவாரம் கழித்துக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார் ‘ஜோக்கர்’ பட இயக்குநர் ராஜூ முருகன்.

மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மிகவும் கலவையான விமர்சனங்களையே சந்தித்தது. குறிப்பாக பெண்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கு கேரள மாந்திரீகர்களைத் தேடிப்பிடித்து தங்கள் சொந்தச் செலவில் சூன்யம் வைத்தார்கள். இதனால் முதல் மூன்று நாட்கள் நன்றாக இருந்த வசூல் டல்லடிக்க ஆரம்பித்தது .

இந்நிலையில் இப்படத்துக்கு ஒரு வாரகாலம் தாமதமாக தனது ஆதரவைத்தெரிவித்து முகநூலில் பதிவிட்டிருக்கிறார் ‘குக்கூ’,’ஜோக்கர்’ படங்களில் இயக்குநர் ராஜூ முருகன். அப்பதிவில்...'சூப்பர் டீலக்ஸ்' பார்த்தேன். படம் நெடுக அசாத்தியமான காட்சிகள். மனித மன ஆழங்களின் அன்பை, குரூரத்தை, காமத்தை, கடவுளை பிரமாதமான திரைமொழியில் பேசுகிறது படம். 

உலக தரமான உருவாக்கம். நண்பன் தியாகராஜன் குமாரராஜாவுக்கு முத்தங்கள். அவ்வளவு சின்சியாராக உழைத்திருக்கும் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ஃபகத் பாசில், அந்த குட்டி பையன் அஷ்வந்த், யுவனின் இசை, P.S. வினோத், நீரவ் ஷாவின் ஒளிக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்..! என்று முத்தமழை பொழிந்திருக்கிறார் ராஜு முருகன். இந்த முத்தத்தை கொஞ்சம் சீக்கிரமே கொடுத்திருக்கக்கூடாதா ராசா?...