Asianet News TamilAsianet News Tamil

சிவகார்த்திகேயன் படத்தில் இவர் தான் வில்லனா? - கமலின் விஸ்வரூபம் பட வில்லன் வெளியிட்ட வீடியோ!

ராஜ்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 21வது படமாக இது உருவாகி வருகிறது. பிரபல நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார்.

Rajkumar Periasamy Directional Sivakarthikeyan 21 movie Villain update Rahul Bose
Author
First Published Jul 4, 2023, 3:33 PM IST

கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான "ரங்கூன்" திரைப்படத்தை இயக்கிய, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்பொழுது உருவாகி வரும் அடுத்த திரைப்படம் தான் சிவகார்த்திகேயனின் 21 வது திரைப்படம்.

பிரபல நடிகை சாய் பல்லவி இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார், அதே சமயம் இந்த திரைப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில வாரங்களுக்கு முன்பு வெகு சிறப்பாக துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

தற்பொழுது காஷ்மீரின் பல பகுதிகளில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியான ஒரு அப்டேட்டாக இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ராகுல் போஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது, ராகுல் போஸ் ஒரு பிரபல பாலிவுட் நடிகர் ஆவர்.  

இவர் முதன் முதலில் தமிழில் நடித்த திரைப்படம் கடந்த 2013ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து வெளியிட்ட விஸ்வரூபம் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் தற்பொழுது வெளியிட்டுள்ள வீடியோவில், தான் காஷ்மீரில் ஒரு படத்தின் படபிடிப்பு பணியில் இருப்பதாக கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

இதையும் படியுங்கள் : 'மாமன்னன்' படத்தில் கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா?

Follow Us:
Download App:
  • android
  • ios