Asianet News TamilAsianet News Tamil

10 கோடி வாங்கவில்லை...கமல் உத்தமன் ஞானவேல் ராஜாதான் வில்லன் ...விளக்கம் வெளியிட்ட ராஜ்கமல் நிறுவனம்...

கமலஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு ’உத்தமவில்லன்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் படுதோல்வி அடைந்ததால் அந்த படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், இந்த படம் ரிலீஸ் ஆகும்போது பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டதால்  முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.
 

rajkamal films reply to gnanavel raja
Author
Chennai, First Published Sep 27, 2019, 6:08 PM IST

கமல் தன்னிடம் ‘உத்தம வில்லன்’பட ரிலீஸுக்காக 10  கோடி பணம் வாங்கிவிட்டு இதுவரை திருப்பித் தராமல் ஏமாற்றுகிறார் என்று ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் கூறியிருக்கும் புகார் அபாண்டமானது. அது கமலின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறது என்று ராஜ்கமல் நிறுவனம் இன்று விளக்கம் அளித்துள்ளது. rajkamal films reply to gnanavel raja

கமலஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு ’உத்தமவில்லன்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் படுதோல்வி அடைந்ததால் அந்த படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், இந்த படம் ரிலீஸ் ஆகும்போது பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டதால்  முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’உத்தம வில்லன்’ படம் வெளியாகும் போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சரிசெய்ய கமல்ஹாசன் தன்னிடம் ரூபாய் 10 கோடி  கடன் பெற்றதாகவும் அந்த பணத்திற்கு பதிலாக தனது நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்து வந்தார்.இந்த நிலையில் ரூபாய் 10 கோடி பெற்று நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை நமது நிறுவனத்திற்காக கமல்ஹாசன் படம் நடிக்க முன்வரவில்லை என்றும் ரூபாய் 10 கோடி பணத்தையும் அவர் திருப்பி தரவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் தெரிவித்திருந்தார்.rajkamal films reply to gnanavel raja

ஞானவேல் ராஜாவின் அப்புகாருக்கு இன்று விளக்கம் அளித்த கமலின் ராஜ் கமல் நிறுவனம்,...தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கமல்ஹாசனுக்கு எந்த பணமும் வழங்கவில்லை. கமலுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலேயே ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். ‘உத்தம வில்லன்’பட ரிலீஸ் சமயத்தில் ஞானவேல் ராஜாவை கமல் சந்திக்கவேண்டிய அவசியம் கூட ஏற்படவில்லை. இந்த அபாண்ட புகார் தொடர்பாக ஞானவேல் ராஜா மீது மிக விரைவில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்’என்று தெரிவித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios