ஒருபக்கம் திரைப்படம் நடிப்பது, அரசியல் பணி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிஸியாகவே இருக்கிறார்.

ஒருபக்கம் திரைப்படம் நடிப்பது, அரசியல் பணி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிஸியாகவே இருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் தற்போது ரஜினி ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் இன்று 'பேட்ட' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு... 'பேட்ட' திரைப்படம் பொங்கல் தினத்திற்கு வருவதை உறுதி செய்துள்ளது படக்குழு. இதன் மூலம் தற்போது அஜித் மற்றும் ரஜினி மோதல் கன்பாம் என ரசிகர்கள் பலர் கூறி வருகிறார்கள். 

அஜித், ரஜினி இருவருமே... ரசிகர்கள் கூட்டத்தை அதிகம் கொண்டவர்கள் என்பதால்... இந்த பொங்கல் கோலிவுட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத பொங்களாகவே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் நடிப்பில் 23 வருடத்திற்கு முன் பொங்கல் தினத்தில் 'பாட்ஷா' திரைக்கு வந்தது. அதை தொடர்ந்து தற்போது தான் பொங்கல் தினத்தில் ரஜினியின் படம் வெளியாக உள்ளது. ஆனால் பாட்ஷா திரைப்படத்தை போல் இந்த முறை பொங்கல் தினத்தில் வெளியாகும் 'பேட்ட' படம் பாட்ஷா வன் சாதனைகளை முறியடிக்கவே முடியாது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.

மேலும் எத்தனை முறை டிவியில் போட்டாலும் TRP யை ஒவ்வொரு முறையும் எகிறவைக்கும் படம் பாட்ஷா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜியின் வாழ்வில் 'பாட்ஷா' ஒரு மையில் கல் என்றும் கூறலாம்.