Rajinis new tattoos in the film What is the name of the tato code

பா.ரஞ்சித் இயக்கி வரும் 'காலா' திரைப்படத்தில் ரஜினிகாந்த் கையில் புதிய டாட்டூவுடன் தெறிகக் விடுகிறார்.

கபாலியைத் தொடர்ந்து ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் உருவாகிறது 'காலா'.

திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பார்வை வெளியீடு முதல், படப்பிடிப்பின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பட்டையைக் கிளப்புகிறது.

தற்போது, புதிய புகைப்படமாக ரஜினிகாந்த் கையில் டாட்டூ ஒன்று இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினியின் கையில் காணப்படும் இந்த டாட்டூ (S) திரைப்படத்தில் அவரது குழந்தை அல்லது மனைவியின் பெயராக இருக்கலாம்.

தனுஷின் வுண்டர்பார் ஃதயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில், ஹுமா, சரீனா எனும் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.