*    கிருஷ்ணகிரியை சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளி இளைஞர் திருமூர்த்திக்கு விரைவில் தான் இசையமைக்க இருக்கும் ஒரு படத்தில் பாடல் வாய்ப்பு தருவதாக சொல்லி சிலிர்க்க வைத்துள்ளார் டி.இமான். இமானை தேசம் கடந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
(இறைவன் உம்மோடு இருப்பாராக)

*    ஸ்ரீதேவியின் மகள் வரை மனம் கவர்ந்த தென்னிந்திய ஹீரோவான டோலிவுட் புகழ் விஜய் தேவரகொண்டா, பாலிவுட்டில் தடம் பதிக்கும் முன் தனது இஷ்ட பிரதேசமான கோலிவுட்டில் செம்ம ஹிட்டான ஹீரோவாக ரசிகர்களிடம் இடம் பிடிக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார். அவருக்கு கோலிவுட்  இளம் ரசிகைகளிடம் இருக்கும் கிரேஸை வைத்து ஒரு டீமே அவருக்கு கதை சொல்ல ஹைதராபாத் கிளம்பியிருக்கிறது. 
(வாங்கண்ணா வணக்கங்கண்ணா!)

*    ஜி.வி.பிரகாஷின் கையில் கிட்டத்தட்ட பத்து படங்களுக்கும் மேல் இருக்கின்றன. இந்த நிலையில் ‘டிராப்சிட்டி’ எனும் ஆங்கில படத்தின் ஹீரோவாகிறார் ஜி.வி.பி. டெல் கணேசன் என்பவர் தயாரிக்க, ரிக்கி பர்ச்சர்ல் இயக்குகிறாராம். 
(அப்படின்னா மறுபடியும் தனுஷ் கூட பஞ்சாயத்து ஆரம்பமாகுதுன்னு சொல்லுங்க)

*    சிறுத்தை சிவாவுடனான ரஜினியின் படம் தள்ளிப்போகிறது. இதனால் இந்த இடைவெளியில் தாங்கள் நுழைய பல இயக்குநர்களுக்கு இடையில் போட்டி. கார்த்திக் சுப்புராஜ் தனுஷ் படத்தில் கமிட்டாகி கிடப்பதால் வேறு சில இளம் இயக்குநர்கள் பிட்டு ஓட்டிப் பார்க்கின்றனர். இவர்களுக்கு இணையாக கே.எஸ்.ரவிக்குமாரும் மல்லுக்கு நிற்பதுதான் ஹைலைட்டு. ஆனால் ரஜினிதான் ‘ஹிட்டாகுமா?’ என்று யோசிக்கிறாராம். 
(பேசாம ’படையப்பா 2’ எடுங்க தல)

*    நல்ல நடிகர் சித்தார்த். ஆனால் பெரிதாய் ஜொலிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனின் பேரன் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிதார்த்தின் நடிப்பு, சின்ஸியாரிட்டியை பார்த்து கமலே செமத்தியாக பாராட்டினாராம். 
(அப்ப, மக்கள் நீதி மய்யத்துல சீக்கிரமே சிதார்த்த எதிர்பார்க்கலாமுன்னு சொல்லுங்க