வளர்ந்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்துக்கள் கிடைத்து விடுவது இல்லை. அதிலும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது பலரது கனவு என்றும் கூறலாம். 

வளர்ந்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்துக்கள் கிடைத்து விடுவது இல்லை. அதிலும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது பலரது கனவு என்றும் கூறலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தில் முதல் முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார் காமெடி நடிகர் யோகிபாபு.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் யோகி பாபு நடித்துள்ள 'தர்மபிரபு' படத்தின் டீசரை பார்த்து, ரஜினிகாந்த் இந்த படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், இவர் ஒவ்வொரு படங்களிலும்அவர் ஈடுபாடுடன் நடிப்பதை பார்த்து வியந்து, அவரை பாராட்டியதோடு, தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு காத்திருப்பதாக கூறி வாழ்த்தியுள்ளார். இதனால் யோகி பாபு இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.