தமிழ் புத்தாண்டு தினத்தை இன்று உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தமிழர்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும் தமிழ் மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களுடைய வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எப்போதும் நடிகராக வாழ்த்து சொல்லும் ரஜினிகாந்து, முதல் முறையாக விரைவில் அரசியலில் குதிப்பதால் என்னவோ.... தமிழர்களின் போராட்டத்தின் வலியை புரிந்துக்கொண்டு தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த் "உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.