Rajinikanth vs bjp about the national ward winning controversy

மாஸ் கமர்ஷியலாகவே நடித்து வந்த ரஜினி கடந்த ஆண்டு வெளியான படத்தில் எமோஷனலாகவும் நடித்து நல்ல நடிப்பு என்ற பெயரைப் பெற்றார். நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் விருது அறிவிப்பில் அவரது பெயர் இல்லை. 

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கட்சி ரஜினியை தங்கள் கட்சிக்கு இழுக்க முயன்றது. ஆனால் ரஜினி பிடிகொடுக்கவில்லை.

இடைதேர்தலின்போது அந்தக் கட்சியின் வேட்பாளர் மேலிட உத்தரவின் படி ரஜினியை சந்தித்து விட்டு வெளியே வந்து ரஜினி தனக்கு ஆதரவு தரவிருப்பதாக சொன்னார்.

ஆனால் ரஜினி மறுநாளே தன் ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவித்துவிட்டார். இப்படி எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் ஆதரவு தெரிவிக்காத ரஜினி மீது மேலிடத்துக்கு வருத்தம்.

அதனால் தான் கடைசி நேரத்தில் ரஜினி பெயரை பட்டியலில் இருந்து எடுத்து விட்டதாக விருதுக்குழுவில் இருந்த ஒருவர் தனது நெருங்கிய வட்டாரத்தில் பேசியது டெல்லி மீடியாக்களில் வலம் வருகிறது. 

இது எந்த அளவுக்கு உண்மை என்பது ப்ரியதர்ஷன் வாய் திறந்தால் தான் தெரியும்.