Asianet News TamilAsianet News Tamil

கோரோனோ பற்றி ரஜினி கூறியது தவறு! அதிரடியாக வீடியோவை நீக்கிய ட்விட்டர் இந்தியா!

இந்தியா உட்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ், மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் போராடி வருகிறது.
 

rajinikanth video removed from twitter india
Author
Chennai, First Published Mar 22, 2020, 12:46 PM IST

இந்தியா உட்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ், மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் போராடி வருகிறது.

குறிப்பாக இந்தியாவில், அதன் தாக்கம் அதிகமாகாமல் தடுக்க, பாரத பிரதமர் மோடி, மார்ச் 22 (இன்று ) ஒரு நாள், மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை பின் பற்ற வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளார்.

rajinikanth video removed from twitter india

இதனை அணைத்து மக்களும் வரவேற்றது மட்டும் இன்றி, பின்பற்றியும் வருகின்றனர். அதே போல் பிரபலங்கள் பலரும், சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு தங்களால் முடிந்தவரை கொரோனா பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா வைரஸ் பற்றி பேசி வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

rajinikanth video removed from twitter india

இந்த வீடியோவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளதாகவும், அது மூன்றாவது ஸ்டேஜிற்கு போய்விடக்கூடாது என்றும் கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் வரை பரவாமல் தடுத்தாலே அது மூன்றாவது ஸ்டேஜுக்கு போகாமல் தடுக்கலாம் என கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்: தன்னை தானே தனிமை படுத்திக்கொண்ட இயக்குனர் மணிரத்னத்தின் மகன்! பரபரப்பு வீடியோவை வெளியிட்ட குஷ்பு!
 

இந்த வீடியோவில் ரஜினியின் கூற்று தவறு என்றும், தங்களது விதிமுறைக்கு எதிரானது எனக்கூறி டிவிட்டர் இந்தியா அதிரடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட வவீடியோவை நீக்கியுள்ளது.

rajinikanth video removed from twitter india

அதாவது கொரோனா வைரஸ் 14 மணி நேரம் வரை பரவாமல் இருந்தால் மூன்றாவது நிலையை தவிர்க்கலாம் என்று ரஜினிகாந்த் கூறிய கருத்து தவறு என பலர் டுவிட்டரில் புகார் பதிவானதை   அடுத்து இந்த வீடியோவை நீக்கி உள்ளதாக தெரிகிறது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் சிறு சலசலப்பு ஏற்பட்டாலும், பாகுபாடு இன்றி ட்விட்டர்  இந்தியா எடுத்த நடவடிக்கையை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios