கொரோனா வைரசால்  பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் குறைந்த பட்சம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகை சுஹாசினியின் மகன், கடந்த 18 ஆம் தேதி அன்று, லண்டனின் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். இவருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் இல்லை என்று உறுதிப்படுத்திவிட்ட போதிலும், 14 நாட்கள் தன்னை தானே தனிமை படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளார்.

தற்போது தன்னுடைய மகன் நந்தன் கண்ணாடி அறைக்குள் தனிமையில் இருக்கும் விடியோவை வெளியிட்டுள்ள நடிகை சுஹாசினி தனது மகன் நந்தன் கடந்த 18ஆம் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும், இதனையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனினும் அவர் 14 நாட்கள் தனிமையில் இருக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் மணிரத்தினம் மகன் நந்தன் கூறியபோது ’தனிமையில் இருப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், 14 நாட்கள் தனிமையில் இருப்பதால்,  நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது என்றும் இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது நடிகை குஷ்பு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட  வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.