சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த முக்கிய அறிவிப்பை தெரிந்து கொள்வதற்கான நாள் இன்று வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த 5ம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர். 

இந்த ஆலோனை கூட்டத்தில் 'தான் கட்சி ஆரம்பித்தால் நான் முதல்வர் வேட்பாளர் இல்லை உங்களில் ஒருவர்தான் முதல்வர் வேட்பாளர்' என நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் வெளிப்படுத்தியதாகவும், அதற்கு நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்ததாகவும். இதைத்தான் ரஜினிகாந்த் ஏமாற்றம் எனச் செய்தியாளர்களிடம் குறிப்பட்டதாவும் தகவல்கள் வெளியானகின. 

இந்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்று இரண்டு முக்கியமான அறிவிப்புகளை ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளதாகவும், அதில் கட்சி மற்றும் மாநாடு குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அதற்கு முன்னதாக போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் காணொலி மூலம் மாவட்ட செயலாளர்களுடன் இறுதி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை முடித்துக் கொண்டு லீலா பேலஸ் கிளம்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்கள் மலர் தூவி வழியனுப்பிவைத்தனர். தற்போது லீலா பேலஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் ரஜினிகாந்த் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.