rajinikanth Unfulfilled desire

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைத்தால் எதையும் வாங்கி விடலாம் என்கிற அளவிற்கு பணம் இருக்கிறது. சொன்னதைச் செய்யும் ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது தான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் இவருக்கும் நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளதாம். இது குறித்து ரஜினியே கூறியுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் தென்னிந்திய திரையுலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக துபாயில் 2 . 0 இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்து உங்களுக்கு ஏதாவது நிறைவேறாத ஆசை இருக்கிறதா என கேட்டார்.

இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், இருக்கிறது என்னுடைய ஆசை ஒன்று இன்னும் நிறைவேறவில்லை. தற்போது அதை பற்றி சொல்ல முடியாது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று பதில் கொடுத்துள்ளார்.

பலரும் ரஜினியின் ஆசை அரசியல் பயணமாக இருக்கும் எனக் கூறி வருகின்றனர். ரஜினியின் ஆசை என்னவாக இருக்கும்...?