நடிகர் ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கான வழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்த விருது குறித்து டெல்லியில் தகவன் மற்றும்  ஒலிபயப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவேடகர் அறிவித்தார். திரைப்படத்துறைக்கான சாதனையாளர் வாழ்நாள் விருது கோவாவில் நடைபெபெறும் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட உள்ளது.  சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விருது குறித்து ரஜினிகாந்திடம் தெரிவித்துள்ளதாக பிரகாஷ் ஜவேடகர் கூறியுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் icon of golden jubilee என்கிற சிறப்பு விருதும் ரஜினிகாந்துக்கு  வழங்கப்பட உள்ளது.

 

ஏற்கெனவே 2000 ஆம் ஆண்டு மத்திய அரசு ரஜினிகாந்துக்கு பத்ம பூஷன் விருதும், 2016ம் ஆண்டு பத்ம விபூசன் விருதும் வழங்கி கவுரவித்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது.