rajinikanth talk about her first love

நடிகர் சங்க கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மேலும் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் மேடையில் பேசும் போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது அவருடைய முதல் காதல் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த் தனக்கு முதல் காதல் இருந்ததை அனைவர் முன்னிலையிலும் ஒப்புக்கொண்டார்.

மேலும் இந்தக் காதல் பற்றிப் பேசிய அவர், தான் பள்ளிப் பருவத்தில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் ஆனால் அந்த காதல் தோல்வியடைந்ததாகவும் தெரிவித்தார்.

இவரின் இந்த பதிலுக்கு லதா ரஜினிகாந்த், சாதாரணமாக எழுந்து உங்கள் காதலி பெயரைக் கூற முடியுமா எனக் கேட்க அனைவர் மத்தியிலும் அவருடைய முதல் காதலியின் பெயரைக் கூற மறுத்துவிட்டார்.