Rajinikanth support Modi

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தமிழக அரசியல் சூழல் அடியோடு ஆட்டம் கண்டுள்ளது. யார் அடுத்த முதல்வர் என்று தேர்வு செய்வதற்கே இழுத்துக்கொண்டு போய் தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராகவும் ஆகியுள்ளனர்.

தற்போது ஓரளவிற்கு கமல் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்... ரஜினிகாந்த் அரசியல் பற்றி எதையும் பேசாமல் மௌனம் சாதித்து வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி SwachhataHiSeva என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த திட்டத்திற்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என ரஜினிகாந்த் ட்விட் செய்துள்ளார். இதில் இருந்து ரஜினி மோடியின் பக்கம் சாய்வதாக பலரும் இணையதளத்தில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…