rajinikanth sing a ar rahuman song

நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என அவருடைய ரசிகர்கள் ஒரு பக்கம் வழி மீது விழி வைத்து காத்திருக்க. தலைவரோ கிடைத்த கேப்பில் எல்லாம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தன்னுடைய ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்துகொண்டிருந்த நிலையில், தற்போது அவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பொது மேடையில் பாட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் படி ஏ.ஆர். ரகுமான் டெல்லியில் டிசம்பர் 23ம் தேதி எனகோர் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரகுமானின் 25 ஆண்டு திரை இசை பயணத்தை பாராட்டி ரஜினிகாந்த் பேச உள்ளார். அதே போல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தனக்கு பிடித்த ஒரு பாடலையும் ரஜினிகாந்த் பாட உள்ளதாக கூறப்படுகிறது.