அரசியல் பயணத்தை தொடங்கும் நிலையில் ரஜினிகாந்த் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

அடுத்து ரஜினி நடிப்பில் கவனம் செலுத்துவாரா அல்லது அரசியல் களத்தில் குதிப்பாரா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளனர். இந்நிலையில் இன்று அரசியலை சற்று ஓரங்கட்டி வைப்பதாக ரஜினி அறிவித்தார். 

இதையடுத்து தற்போது, ரஜினி புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதாவது, பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளார். 

கபாலிக்கு முன்னதாகவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது உறுதியாகிவிட்டது.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது பிரபுதேவாவை வைத்து மெர்குரி எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஏப்ரல் 13-ல் வெளியாகிறது.

இதனிடையே ரஜினியின் எந்திரன் 2.0 வெளியீட்டு தேதிக்காக காத்துக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.