சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2 .௦ படத்தின் எடிட்டிங், கிராபிக்ஸ்  பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான கபாலி படத்தின், பெரும்பகுதி மலேசியாவில் படமாக்கப்பட்டிருந்தது. அதே போல முதல் பாகமான எந்திரன் படத்திலும் பல காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப் பட்டிருந்தது.

ஆனால் தற்போது ரஜினிரசிகர்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் "2 .௦" படம் முழுக்க முழுக்க இந்தியாவில் உள்ள பகுதிகளில் தான் படமாக்கப்பட்டுள்ளது. 

ஏன் ரஜினிகாந்த் இப்படி இந்தியாவிலேயே படமாக்க சொல்லி ஷங்கரிடம்  கூறினார் என்கிற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. 

மோடியை ரஜினிகாந்த் ஒரு முறை சந்தித்த போது, மோடி ரஜினிகாந்திடம் நீங்கள் தற்போது நடித்து வரும்" 2 . ௦" படத்தை இந்தியாவிலேயே தான் படமாக வேண்டும் என கேட்டுக்கொண்டாராம்.

மோடி சொன்ன வார்த்தையை கட்டளையாக ஏற்று கொண்ட ரஜினிகாந்த், இந்த படத்தை முழுக்க முழுக்க இந்தியாவில் தான் எடுக்க வேண்டும் என ஷங்கரிடம் கூறியதால். அதை ஏற்று கொண்டு ஷங்கரும் டெல்லி, பம்பாய் போன்ற இடங்களில் படமாக்கினாராம், வெளிநாட்டு இடங்களில் எடுக்க வேண்டிய ஒரு சில காட்சிகளை செட் போட்டு படமாகியுள்ளார்கள் படக்குழுவினர்.