துக்ளக் பத்திரிகையின் 50ம் ஆண்டு விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது சர்ச்சை கருத்திற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தி.க.வினர் நீதிமன்ற வரை சென்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாக எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதனிடையே ரஜினி வீட்டை முற்றுகையிட போவதாகவும் அறிவிப்புகள் வெளியான.

இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அன்று போடப்பட்ட பாதுகாப்பு இன்று வரை நீடித்து வருகிறது. இந்த நிலையில், காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று சந்தித்து பாதுகாப்பு தொடர்பாக ஆலோசித்துள்ளார்.

அப்போது, தனக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை திரும்பபெற்றுக்கொள்ளும் படி ரஜினிகாந்த் கேட்டுகொண்டதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது வீட்டுக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பையும் திரும்பப் பெற வேண்டுமென ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளாராம்.

எனினும், குறித்து காவல் துறை இயக்குனரிடன் கலந்தாலோசித்து முடிவு செய்யவுள்ளதா காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு ரஜினிகாந்திடம் கூறியதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.