rajinikanth reject agriculture based movie
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார். இதே படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் நிராகரித்த படத்தில், விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. காக்கா முட்டை படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர், மணிகண்டன் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் தான் தற்போது விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், இந்த படத்தில் நடிக்க முதலில் ரஜினிகாந்தை தான் இவர் அணுகியதாகவும், ஆனால் ஒரு சில காரணங்களால் ரஜினியால் இந்த படத்தில் நடிக்க முடியாததால் தற்போது அந்த கதாப்பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்கு, 'கடைசி விவசாயி' என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவு . தற்போதைய தமிழக விவசாயிகள் நிலை குறித்து இந்த படம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
