தீபாவளி ரிலீஸுக்கு செம்ம சவுண்டாக தயாராகிவிட்டது பிகில். படத்தின் வளர்ச்சியில் விஜய்யின் பங்கானது ஆடியோ ரிலீஸ் வரை டாப் கியரில் இருந்த வகையில் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் மகிழ்ச்சியே. ஆனால், இயக்குநர் அட்லீதான் பெரும் செலவை இழுத்துவைத்துவிட்டார் என்று கொதிக்கிறார்கள் என கோடம்பாக்கத்தில் பரபரப்பு. 

*விஜய்யின் அடுத்த படத்தின் இயக்கம் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிதான் வில்லனாக நடிக்கிறார்! என்று ஒரு ஹாட் நியூஸ் தென்னிந்திய சினிமா உலகத்தை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. வி.சே.வுக்கு பதினைந்து கோடி வரை சம்பளம் தர தயாராகிவிட்டதாம் தயாரிப்பு தரப்பு. ஆனால் அதே விஜய்சேதுபதியை நாயகனாக வைத்து படமெடுக்கும் நிறுவனங்கள் ‘வில்லன் ரோல் பண்ணாதீங்க ப்ளீஸ். இல்லேன்னா எங்க பட ரிலீஸுக்கு பிறகு என்ன வேணா பண்ணிக்கோங்க!’என்கிறார்களாம்.

 

*சமீபத்தில் கமல்ஹாசனை சற்று சீண்டிவிட்டது ஞானவேல் ராஜா தரப்பு. இதில் ஏக சூடாகிவிட்டாராம் கமல்ஹாசன். விளைவு, பக்கா அட்வோகேட் ஒருவரின் மூலமாக ஞானவேல்ராஜா மீது மான நஷ்ட வழக்கு போடும் முடிவில் இருக்கிறாராம்.

 

*போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதில் நடிகர் ரஜினிகாந்துக்கு பெரிய ஆர்வம் கடந்த சில வருடங்களாக இல்லை. ஆனால் சமீபத்தில் ‘தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்த தன் மனைவி லதாவுடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்துக்காக, தானே இரண்டு சேர்களை இழுத்துப் போட்டு உயரமாக்கி, அதில் அமர்ந்து குஷியாக போஸ் கொடுத்தாராம். 

*ஸ்போர்ட்ஸில் சிவனேன்னு இருந்த ரித்திகா சிங்கை ‘இறுதிச்சுற்று’ படத்துக்கு அழைத்து வந்து மேக் அப் போட வைத்து மெர்சல் வாழ்க்கையை கற்றுக் கொடுத்துவிட்டனர். படம் வேறு பிய்ச்சுக்கிட்டு ஓடிடுச்சு. அதற்கடுத்தும் இரண்டு படங்கள் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தன. சமீபத்தில் படங்களே இல்லாத நிலையில் பொண்ணு இப்ப கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி, வேட்டைக்கு களமிறங்கிடுச்சு. 

*வெளிநாட்டிலிருந்து சென்னை கிளம்பிய சிம்புவுக்கு திடீரென சில லட்சங்கள் தேவைப்பட்டிருக்கிறது. கையில் காசில்லாத நிலையில் தனது தயாரிப்பாளர்கள் சிலருக்கு போன் போட்டுக் கேட்டிருக்கிறார்.

ரியாக்‌ஷனே இல்லையாம். விளைவு, அப்பாவுக்கு போன் போட அவர் உடனடியாக பணத்தை போட்டுவிட்டாராம். சிம்பு இப்ப செம்ம ஜிவ்வ்வ்!