rajinikanth political entry issue
கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டும் என பல வருடங்களாக அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், பல அரசியல் கட்சிகளும் ரஜினிகாந்திற்கு தற்போது வரை அழைப்பு விடுத்து வருகின்றன, ஆனால் ரஜினிகாந்த் 1996 க்கு பிறகு, இது வரை எந்த ஒரு அரசியல் காட்சியிலும் இணைந்து பணியாற்றவில்லை.
இந்நிலையில் தற்போது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து வரும் ரஜினிகாந்த், ரசிகர்களிடம் பேசிய போது சூழ்நிலைக் காரணமாக அரசியலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
ரஜினியின் இந்த கருத்தை ரசிகர்கள் பலர் வரவேற்றாலும்,
நெட்டிசன்கள் பலர் தமிழர் அல்லாத ரஜினி ஏன் அரசியலுக்கு வரவேண்டும், மீ்ண்டும் மீண்டும் ஒரு நடிகரே நாட்டை ஆள வேண்டுமா... இளைஞர்களுக்கு வாய்ப்புக்கொடுங்கள் என்பது போன்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
