ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படம் பொங்கல் தினத்தையொட்டி, நாளை திரைக்கு வருகிறது.  இதே நாளில் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படமும் வெளியாகிறது. 

தமிழகம் முழுவதும் உள்ள 1090 திரையரங்குகளை, இவ்விரு படங்களும் பகிர்வதால் வசூல் பாதிக்கும் என்றும் எனவே ஏதேனும் ஒரு படத்தின் ரிலீசை தள்ளி வைக்கும்படி தியேட்டர் அதிபர்கள் சார்பில் வற்புறுத்தப்பட்டது. 

இதனால் விஸ்வாசம் ரிலீஸ், சில நாட்கள் தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 10 ஆம் தேதி, படம் வெளியாகும் என்று பட நிறுவனம் உறுதி செய்து அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

தற்போது இரு படங்களுக்கும் வரவேற்பு இருப்பதாகவும் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுவதாகவும், ஆனால் இதே தேதியில் ஆந்திராவில் பேட்ட படத்திற்கு, போதிய தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காரணம் 10-ஆம் தேதி அன்று, பாலகிருஷ்ணா நடிக்கும் 'என்.டி.ஆர்"  மற்றும்  ராம் சரண் நடிக்கும் 'வினய விதேய ராமா'  ஆகிய இரண்டு பெரிய நடிகர்களின் நேரடி தெலுங்கு திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. 

சுமார் இரண்டு பெரிய படங்களும் 90  சதவீதத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாவதால், 'பேட்ட' படத்தின் ரிலீஸை வருகிற 26ம் தேதி அன்று, தெலுங்கில் வெளியிடும்படி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் முடியவே முடியாது என மறுத்து, ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதில் பட தரப்பு உறுதியாக இருந்து விட்டது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள  பேட்ட படத்திற்கு, குறைவான திரையரங்குகள் கிடைத்துள்ளது. இது பேட்ட படத்திற்கு வந்த புது சோதனையாகவே பார்க்கப்படுகிறது. 

தெலுங்கு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாவதால் விஸ்வாசம் படத்தை ஜனவரி 26-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது