Asianet News TamilAsianet News Tamil

Rajinikanth : எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்காத அண்ணாத்த.... அடுத்த படத்திற்காக பேவரைட் இயக்குனரை நாடிய ரஜினி?

அண்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத காரணத்தால், நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை தன்னுடைய பேவரைட் இயக்குனருக்கு கொடுத்துள்ளாராம்.

Rajinikanth next movie with KS Ravikumar
Author
Tamil Nadu, First Published Dec 6, 2021, 4:34 PM IST

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் அண்ணாத்த. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இருப்பினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்த பட தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறாராம் ரஜினி.

Rajinikanth next movie with KS Ravikumar

கடந்த சில ஆண்டுகளாகவே இளம் இயக்குனர்களின் படங்களில் அதிகளவில் நடித்து வந்த ரஜினி, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை இளம் இயக்குனர்களுக்கே வழங்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. 

அந்த பட்டியலில் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இருந்தன. அண்மையில் பாண்டிராஜ் பெயரும் ரஜினியின் அடுத்த பட லிஸ்டில் இருந்தது.

Rajinikanth next movie with KS Ravikumar

இந்நிலையில், அண்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத காரணத்தால், தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை தன்னுடைய பேவரைட் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாருக்கு வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இதற்கான கதை விவாத பணியில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தனது சகாக்களுடன் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் முத்து, படையப்பா போன்ற படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios