ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில் ஷூட்டிங்கின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில் ஷூட்டிங்கின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. உடனடியாக அண்ணாத்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகர், நடிகைகள் அனைவரும் சென்னை திரும்பினர். இருப்பினும் ரஜினிகாந்த் ஐதராபாத்திலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து 3 நாட்களாக ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாட்டிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மூன்று நாள் சிகிச்சைக்கு பின் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் சீரான நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மேலும் மருத்துவர்கள் ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், இதுபோல் ரத்த அழுத்த மாறுபாடுகள் இருப்பது அவரது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்றும், ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனை கடவுளின் எச்சரிக்கையாக கொண்டே, அரசியலில் இருந்து விளங்குவதாகவும், இதற்காக பகிரங்கமாக ரசிகர்களிடம் மன்னிப்பு கூறுவதாகவும் தன்னுடைய 3 பக்க அறிக்கையில் தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த ரசிகர்கள் சிலர், கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக ரஜினிகாந்தின் வீட்டின் முன், தலைவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நேற்று ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரத்த அழுத்த மாறுபாடுகாக ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்ற, அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் வீடியோ மூலம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ இதோ...
Now only I got relief, after watching Thalaivar❤
— Raana Ram (@raana_ram) January 1, 2021
Thank you so much #Apollohospital ,Hyderabad.#HappyNewYear2021 🤘❤😊 pic.twitter.com/PZkh4DLAYS
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 1, 2021, 2:12 PM IST