*  செம்ம செக்ஸி உடற்கட்டு, நல்ல உயரம்,  வசீகரமான முகம், பாலாவிடம் குட்டு வாங்கியதில் நன்கு நடிக்கவும் பழகிவிட்டார்! என எல்லா பிளஸ்களும் இருந்தும் ஆர்யாவால் ஜெயிக்க முடியவில்லை. ஆனாலும் மனுஷன் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யாவும், அவரது மனைவி சாயிஷாவும் இணைந்து நடித்திருக்கும் ‘டெடி’ படத்தின் ஷூட் முடிந்தது. இப்படத்தை பெரிதாய் நம்புகிறார் ஆர்யா. 

*  சினிமா பிரபலங்கள் ரசிகர்களிடம் இருந்து வெகு துரத்தில் இருக்கும் வரையில்தான் அவர்கள் மீது ரசிகர்களுக்கும் கிரேஸ் இருக்கும், பிரமிப்பு இருக்கும். ரொம்ப நெருங்கி வந்தால்  சாதாரணமாகிவிடுவார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் இதை தெளிவாய் அறிந்து நடந்தனர். ரஜினியும், கமலும்  கூட இரண்டு  வருடங்களுக்கு முன் இப்படித்தான். ஆனால், கட்சி ஆரம்பித்து வலம் வர ஆரம்பித்த பிறகு  கமல் மீதான லயிப்பும், ரஜினியின் வீட்டு உட்புற அறைகள், அவரது அலுவலக அறை, அவரது கார்கள் ஆகியன குறித்த போட்டோக்கள் அடிக்கடி வெளியாக துவங்கிய பின் ரஜினி பற்றிய பிரமிப்பும் பெரிதாய் குறைய துவங்கிவிட்டதாம். 

*  தமிழ்நாடு மகிழ்ச்சி அடைய, நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன்! நான் இதற்கு முன்பு இப்படி செய்ததில்லை! அது பற்றி எதுவும் தெரியாது! ஒருவரிடம் எப்படி கேட்பது! என ரைஸா ட்விட்டரில் ஸீன் போட்டார். 
இதற்கு ‘டேட்டிங் போனா உனக்கு வேணா மகிழ்ச்சி. இதுல தமிழ்நாடுக்கு என்ன மகிழ்ச்சி! போவீயா!’ என அந்த பொண்ணை அப்செட்டாக்கிவிட்டனர் ஃபாலோ செய்யும் பொல்லாத பயல்கள். 

*  தர்பாருக்கு அடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக குஷ்பூவை ஒப்பந்தம் செய்ய சிவா விரும்பியதையும், ஏனோ அதற்கு ரஜினி ஓ.கே! சொல்லவில்லை எனும் தகவலை முதன் முதலில்  பிரேக் பண்ணியது ஏஸியாநெட் தமிழ்! தான். அந்த பஞ்சாயத்து இன்னும் தொடர்கிறது. குஷ்பூவை சிவா விடாமல் ரெக்கமெண்ட் பண்ண, ரஜினியோ மெளனத்தை  தொடர்கிறாராம். குஷ்பூவால் இவர்களுக்குள் கும்மாங்குத்து வந்து, படம் டிராப் ஆகாமல் இருந்தால் சரி! என்று தயாரிப்பாளர்கள் நினைக்குமளவுக்கு இந்த முரண்பாடு  தொடர்கிறது.