சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'காலா' திரைப்படம் இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'காலா'. மும்பை தாராவி பற்றி பேசும் விதத்தில் பா.ரஞ்சித் இயக்கி இருந்த இந்த படத்தில் மக்களுக்கு நல்லது செய்யும் கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருந்தார்.

Ajith Sister Marriage: தேவதை போல இருக்கும் தங்கையை... திருமணத்தில் மாப்பிள்ளைக்கு தாரைவார்த்து கொடுத்த அஜித்!

வில்லனாக பாலிவுட் நடிகர் நானா பட்நேக்கர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, பங்கஜ் திருப்பாதி, மணிகண்டன், அஞ்சலி படேல் , சாக்ஷி அகர்வால், திலீபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் சுமார் 140 கோடி பட்ஜெட்டில் எடுக்க பட்டு, முதலுக்கு மோசம் இல்லாத விதமாக ஜஸ்ட் பாஸ் ஆவது போல் 156 கோடி மட்டுமே வசூலித்தது.

80 வயதிலும் ஃபிட்னஸில் கலக்கும் விஜயகுமார்! அப்பாவின் வெறித்தன ஒர்க்கவுட்டை வெளிப்படுத்திய மகள் அனிதா!

இந்த படம் வெளியாகி சுமார் 6 வருடங்கள் ஆகும் நிலையில், இப்படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டியூட்டின் மாத இதழான சைட் அண்ட் சவுண்ட் என்ற இதழ் வெளியிட்டுள்ளது. இந்த 25 படங்களின் லிஸ்டில், ஓல்டு பாய், ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ், இன்லேண்ட் எம்பயர், பார்பரா, ப்ரைட்ஸ் மெய்ட்ஸ் உள்ளிட்ட படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…