rajinikanth kaala karikaalan first look
கபாலி திரைப்படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ள திரைப்படத்தின் பெயரை இன்று காலை படக்குழுவினர் "காலா கரிகாலன் " என்று வெளியிட்டனர்.
இதை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் பஸ்ட் லுக் சில நிமிடங்களுக்கு முன் வெளியாகியுள்ளது.

இதில் ரஜினி ஒரு கேங் ஸ்டாராக நடிப்பது உறுதியாகியுள்ளது. ஒரு போஸ்டரில் ரஜினி மிகவும் ஆக்ரோஷமாக நெற்றியில் ரத்த காயங்களுடன் உள்ளது போல் இருக்கிறார்.
மற்றொரு போஸ்டரில், ரஜினி மிகவும் லோக்கலாக லுங்கி கட்டிக்கொண்டு மகாராஷ்ட்ரா பதிவெண் கொண்ட ஜீப் மேல் ஜம்பமாக ஒரு நாயுடன் அமர்ந்து கொண்டு செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார்.

அவரின் பின்புறம் ஒரு பக்கம் மும்பையைக் குறிக்கும் வகையில் மிகப்பெரிய கட்டடங்கள் வீடுகள் உள்ளன. மற்றொரு புறம் குடிசை பகுதிகள், ரயில்வே தண்டவாளம், குழந்தைகள் விளையாடுவது என மிகவும் லோக்கல்லாக உள்ளது.
இதில் இருந்து படம் துவங்குவதற்கு முன்பே, பா.ரஞ்சித் மிகவும் இந்த படத்தில் தீவிரமாக இறங்கி விட்டார் என தெரிகிறது. இந்த பஸ்ட் லுக் பார்த்த ரஜினி ரசிகர்கள் செம ட்ரெண்டாகி வருகின்றனர்.
