ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ, மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று இவரது உடல் நிலை குறித்து சற்று முன்னர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ, மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று இவரது உடல் நிலை குறித்து சற்று முன்னர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. கடும் கட்டுப்பாடுகளுடன் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சிகிச்சையில் அவருக்கு முடிவு நெகட்டிவ் என வந்தது. இருப்பினும் ஐதராபாத்திலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். திடீரென்று ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலைச் சீராக இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.
ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பலரும் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் சூப்பர் ஸ்டார் நலம் பெற வேண்டுமென சோசியல் மீடியாக்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதை தொடர்ந்து ரஜினியின் உடல்நிலை குறித்து தற்போது அப்பல்லோ நிர்வாகம் இன்று புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன. அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஜினிகாந்த் தொடர்ந்து ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும், டிஸ்சார்ஜ் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றும், ரஜினிகாந்தை பார்க்க பார்வையாளர்கள் அனுமதி இல்லை என்பதையும் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 26, 2020, 11:13 AM IST