தேர்தலால் ரஜினிக்கு வந்த புது சோதனை!

https://static.asianetnews.com/images/authors/e065074c-8e18-5858-afb6-5be406a1a979.jpg
First Published 23, Mar 2019, 2:10 PM IST
rajinikanth got new problem for election
Highlights

ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து உள்ளதால் அவரது அரசியல் பிரவேசம் தற்போது தள்ளிப்போகிறது. இதற்கிடையில் 2 புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதில் ஒரு படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். மற்றொரு படம் 'படையப்பா' இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
 

ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து உள்ளதால் அவரது அரசியல் பிரவேசம் தற்போது தள்ளிப்போகிறது. இதற்கிடையில் 2 புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதில் ஒரு படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். மற்றொரு படம் 'படையப்பா' இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஏ.ஆர் முருகதாஸ் ஏற்கனவே 'ரமணா', 'கஜினி', 'துப்பாக்கி', 'கத்தி', 'சர்க்கார்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர். முந்தைய படங்களில் லஞ்சம், விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றை சொல்லி இருந்தார். 

மேலும் அவர் சொன்ன கதை பிடித்ததால் ரஜினி நடிக்க ஒப்புக் கொண்டார். படப்பிடிப்பை இந்த மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டு இருந்தனர். அதற்காக அரங்குகள் அமைக்கும் பணியை ஆரம்பித்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்து பண நடமாட்டங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதனால் ரஜினிகாந்த் படப்பிடிப்பு செலவுக்கான தொகையை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை தேர்தல் முடிந்த பிறகு அதாவது அடுத்த மாதம் இறுதியில் தொடங்கலாம் என்று தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ரஜினிகாந்த் ஜோடியாக இந்த படத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். தேர்தலில் ரஜினிகாந்த் நிற்கவில்லை என்றாலும் அவரின் படத்திற்கு இதுபோல் ஒரு சோதனை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

loader