சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார் .

இந்நிலையில் திடிரென்று இவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றதாக கூறப்படுகின்றது. எல்லோரும் அவர் படப்பிடிப்பு காரணமாக தான் சென்றிருக்கிறார் என்று நினைக்க,

ஆனால் உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தால் தான் தற்போது சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இந்த செய்தி நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவ, ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், இதற்கு ரஜினி தரப்பே இது வரை மௌனம் சாதித்து வருகின்றனர்.