rajinikanth give the great job for raju magalingam

பதவி விலகிய ராஜூமகாலிங்கம்:

சமீபத்தில் லைகா நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பற்றியாற்றி வந்த ராஜூமகாலிங்கம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அடுத்ததாக ரஜினியுடன் இணைந்து அரசியல் பணியிலும் ஈடுபடுவார் என கூறப்பட்டது.

ரஜினிகாந்த் கொடுத்த பதவி;

இந்த நிலையில் ரஜினிகாந்த், ராஜூ மகாலிங்கத்திற்கு மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக நியமித்துள்ளதாக தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பும் ரஜினிகாந்திடம் இருந்து வந்துள்ளது.

நெருக்கத்தால் கிடைத்த வாய்ப்பு:

ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள 2.௦ படத்தில் பணியாற்றிய போது ரஜினிக்கும் ராஜூ மகாலிங்கத்திற்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் அதன் அடிப்படையில் தான் லைகாவில் இவர் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது ரஜினியின் மக்கள் மன்றத்தில் இணைந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரஜினியின் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகின்றாராம்.