இதுவரை இந்தப்படம் மொத்தமாக  ரூ 500 கோடி வசூலை தாண்டிய இப்படம் தமிழகத்தில்  மட்டுமே ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது. இந்த வார முடிவில் எப்படியும் ரூ 120 கோடி வரை வசூல்  செய்யும் எனவும், விநியோகஸ்தர்களுக்கு ரூ 60 கோடி ஷேர் தரும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை ஏனென்றால் படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் காத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், பல திரையரங்குகள் 2.0 தான் எங்கள் திரையரங்கில் அதிகம் வசூல் செய்த படம் என கூறி வருவது முரனாக உள்ளது.

படத்திற்கு லாபமே வந்தாலும், விற்கப்பட்ட தொகைப்படி பார்த்தால் ரூ 100 கோடி அட்வான்ஸ் வாங்கிய லைகா நிறுவனம் ரூ 40 கோடி வரை திருப்பி தரும் நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அப்படியே தெலுங்குப்பக்கம் போனால் அவர்கள் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றது போலவே படமும் நன்றாக இருக்க,  தெலுங்கானா ஆந்திரா என வசூல் தெலுங்கு படத்திற்கு இணையாக வசூலிப்பதாக தெரிகிறது.

இப்படத்தின் ஷேர் மட்டுமே ரூ 50 கோடி வந்துள்ளதாம், இதன் மூலம் ரஜினி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். ஆமாம், பவன் கல்யான், சிரஞ்சீவி, மகேஷ்பாபு மட்டுமே தெலுங்கில் செய்த சாதனையை தற்போது சூப்பர் ஸ்டாரும் செய்துள்ளார். இன்னும் ஒரு வாரம் தொடர்ந்தால் தெலுங்கு நடிகர்களின் கோட்டையில் வசூல் மன்னன் ரஜினிதான்.