சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள் இன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள் இன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பல ஆண்டுகளாக ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தார் சூப்பர் ஸ்டார். இம்முறை சட்டமன்ற தேர்தலை கண்டிப்பாக கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிடுவார் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் திடீர் என தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என, மூன்று பக்க அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் ரஜினிகாந்த்.

இவரது முடிவுக்கு பிரபலங்கள், மற்றும் சில ரசிகர்கள் ஆதரவு தெரிவித்த போதிலும், சில ரசிகர்கள் ரஜினிகாந்தின் இந்த முடிவுக்கு தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்து, ரஜினிகாந்த் வீட்டின் முன்பே போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக ரஜினிகாந்த் வீட்டின் முன்பே ரசிகர் ஒருவர் தீ குளிக்கவும் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர அறிவுறுத்தி ரசிகர்கள் இன்று சென்னையில் அறப்போராட்டம் நடத்த உள்ளனர் என்கிற செய்து ஏற்கனவே வெளியான நிலையில். தற்போது வள்ளுவர் கோட்டம் அருகே ரஜினி ரசிகர்கள் காவல்துறையின் அனுமதியோடு ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வெளியூர்களில் இருந்து, பேருந்துகளில் படை எடுத்துள்ள ரஜினி ரசிகர்கள், தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என கோஷங்கள் எழுப்பியும், அரசியல் குறித்த அவரது எண்ணத்தை மாற்றி கொள்ளவேண்டும் என தங்களது கோரிக்கைகளை முன்வைத்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் இதோ... 

Scroll to load tweet…
Scroll to load tweet…