சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் எளிமையானவர் என்பது அனைவரும் அறிந்தது தான். பலருக்கும் வெளியில் தெரியாமல் நிறைய உதவிகளை செய்து வருபவர்.
இந்நிலையில் இவரை பற்றியும், இவரது குடும்பத்தினர் பற்றியும் எதாவது சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.
இதில் குறிப்பாக நஷ்ட ஈடு, பணம் கொடுத்தல் வாங்கல் போன்ற பிரச்சனை இவரை சூழ்ந்து நிற்கும், இந்நிலையில் நேற்று இவரின் மனைவி நடத்தி வரும் பள்ளி மூலம் ஒரு பிரச்சனை வந்துள்ளது.
லதா ரஜினிகாந்த் நடத்தும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக சம்பளமே கொடுப்பது இல்லை என்றும் அவர்கள் நேற்று பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
ஆனால், ரஜினி தரப்பு அப்படியெல்லாம் ஒன்று நடக்கவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு பணப்பிரச்சனை வெளியே வந்ததால் ரஜினியின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
