rajinikanth explained about how dhanush got chance to produce kaala
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் காலா பட குழுவினர், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
.jpg)
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனது திரையுலக பயணம் குறித்த சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்தார். அப்போது, காலா திரைப்படத்தை தனுஷ் தயாரித்தது எப்படி என்பது குறித்தும் விளக்கினார்.

இதுகுறித்து ரஜினி பேசியதாவது:
ஒரு நாள் என் மகள் ஐஸ்வர்யாவிடம், உங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் உங்களது கணவனை மட்டும் வைத்துத்தான் படம் பண்ணுவீர்களா? என்னை வைத்து எல்லாம் படம் தயாரிக்க மாட்டீர்களா? என கேட்டேன். அதற்கு ஐஸ்வர்யா, எனக்கு அதை பற்றி தெரியவில்லை என்றும் இதுதொடர்பாக கணவரிடம் பேசுகிறேன் என்றும் கூறினார்.
அதன்பிறகு நான் கேட்டதை பற்றி ஐஸ்வர்யா தனுஷிடம் பேச, தனுஷ் என்னை சந்தித்து பேசினார். அப்போது, நீங்கள்(ரஜினி) கதையையும் இயக்குநரையும் தேர்வு செய்துவிட்டால், கண்டிப்பாக படத்தை தயாரிப்பதாக தனுஷ் கூறினார். அதன்பிறகு இயக்குநர் ரஞ்சித்திடம் கதை கேட்டு காலா திரைப்படம் உறுதி செய்யப்பட்டது. இப்படித்தான் தனுஷிற்கு காலா படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது என ரஜினி தெரிவித்தார்.
