அயோத்தியில் இருந்து அப்டேட் உடன் வந்த மொய்தீன் பாய்... லால் சலாம் படத்தின் ஆடியோ லாஞ்ச் தேதி அறிவிப்பு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கி உள்ள திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.
ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவருமே கிரிக்கெட் வீரர்களாகவே நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 9-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... அயோத்தி ராமர் கோயில் குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கு பா. ரஞ்சித் பதில்.. என்ன இப்படி சொல்லிட்டாரு..
லால் சலாம் படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது லால் சலாம் படத்தின் ஆடியோ லாஞ்ச் பற்றிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளனர். அதன்படி வருகிற ஜனவரி 26-ந் தேதி லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர்.
வழக்கமாக ரஜினிகாந்த் படங்களின் இசை வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும். ஆனால் இந்தமுறை லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ரஜினியின் குட்டி கதையையும் கேட்க ரெடியாக இருக்குமாறு கூறி உள்ளனர். இதனால் ரசிகர்கள் இந்த விழாவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்... தலைவருக்கு தண்ணிகாட்டாமல்... தனி ஒருவனாக களமிறங்கும் ஜெயம் ரவி - சைரன் பட ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றம்