ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் "தர்பார்". "பேட்ட" படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடித்துள்ள இந்த படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்துள்ளார். பிரகாஷ் ராஜ், யோகிபாபு, மனோபாலா, ஸ்ரீமன், ஆனந்தராஜ், சுமன் உட்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். பேட்ட படத்தை தொடர்ந்து, தர்பார் படத்திலும் ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். 

நேற்று முன்தினம்  சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது ரஜினிகாந்த் ரசிகர்கள் தர்பார் ட்ரெய்லர் அல்லது டீசர் ரிலீஸ் செய்யப்படும் என மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஒரே ஒரு போஸ்டரை மட்டும் ரிலீஸ் செய்த லைகா, பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு அமைதியாகிவிட்டது. பிறந்தநாள் அன்னைக்கு தலைவர தான் நேரில் பார்க்க முடியல, அவரு ட்ரெய்லரைக் கூட பார்க்க முடியலையே என ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 

இதனிடையே நாளை மறுநாள் (டிசம்பர் 16) மாலை 6.30 மணிக்கு தர்பார் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்படும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால் செம்ம ஹாப்பி மூடில் உள்ள சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்,  சும்மா கிழிக்க தயாராகி வருகின்றனர். மேலும் தர்பார் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து #DarbarTrailer என்ற ஹேஷ்டேக் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.