லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ திரைப்படத்தின் முக்கிய வீடியோ ஒன்றை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
‘கூலி’ திரைப்படம்
தமிழ் சினிமாவில் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரஜினியின் மகளாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இவர்களுடன் கன்னட நடிகர் உபேந்திரா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, மலையாள நடிகர் சௌபின் ஜாகிர், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமீர்கான் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
‘கூலி’ படத்தின் மேக்கிங் வீடியோ
‘கூலி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், படம் குறித்த எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்களை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ள மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் இருப்பது, இயக்குனருடன் பேசுவது, திரைகளில் காட்சிகளை பார்ப்பது, மக்களை சந்திப்பது என அனைத்தும் இடம்பெற்றுள்ளது.
‘ஜெயிலர் 2’ அப்டேட்
‘கூலி’ திரைப்படம் இந்த ஆண்டு மே மாதமே வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், சில காரணங்களால் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
