வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்ற ரஜினி.. அங்கிள் என கதறி அழுத மீனா- கலங்கிப்போன சூப்பர்ஸ்டார்

நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் அன்புள்ள ரஜினிகாந்த், எஜமான், முத்து, வீரா, அண்ணாத்த போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார். 

Rajinikanth condolences to actress meena husband vidyasagar death

நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இந்த எதிர்பாரா மரணம் திரையுலகினரையும், அவரது குடும்பத்தினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையும் படியுங்கள்... நடிகை மீனாவின் கணவர் எப்படி இறந்தார் தெரியுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய பரபரப்பு தகவல்

கடந்த மார்ச் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர், அதன்பின் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். அவரது நுரையீரன் செயலிழந்ததை அடுத்து மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்ய அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். ஆனால் உறுப்பு கிடைக்காததால் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Rajinikanth condolences to actress meena husband vidyasagar death

இதையும் படியுங்கள்... மீனாவின் கெரியரில் திருப்புமுனையாக அமைந்த திருமணம் - அவரின் ரீ-எண்ட்ரியும்... வித்யாசாகரின் பங்களிப்பும்

அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாங்காமல் ரஜினி அங்கிள் என கதறி அழுதாராம் மீனா. இதைக் கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கலங்கிப்போனாராம்.

இதையும் படியுங்கள்... மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை இதுதான் காரணம் - நடிகை குஷ்பு டுவிட்

நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் அன்புள்ள ரஜினிகாந்த், எஜமான், முத்து, வீரா, அண்ணாத்த போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார். இதில் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios