rajinikanth build thiyana mandabam in himalaya

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் என்பதையும் தாண்டி மிகவும் ஆன்மிக பற்று உள்ளவர், மேலும் இவர் அடிக்கடி ஆன்மிக சுற்றலாவிற்காக இமய மலைக்கு சென்று வருவது அனைவரும் அறிந்ததே.

தற்போது, இமய மலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பருடன் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்க்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் ஒன்றை கட்டியுள்ளனர்.

இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழா அடுத்த மாதம் நவம்பர் 10 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. மேலும் அடுத்த வருடம் இந்த மண்டபத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தர உள்ளதாகவும் கூறப்படுகிறது.