Asianet News TamilAsianet News Tamil

உடல்நிலை சூப்பர்... சென்னை வந்ததும் தலைவர் செய்யப்போகும் முதல் வேலை... பறக்கும் போன் கால்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நேற்று சென்னை திரும்பிய நிலையில், முதல் வேலையாக வரும் திங்கள் கிழமை , மக்கள் மன்ற நிவாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
rajinikanth arrange meeting for makkal manram members on Monday
Author
Chennai, First Published Jul 10, 2021, 7:57 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நேற்று சென்னை திரும்பிய நிலையில், முதல் வேலையாக வரும் திங்கள் கிழமை , மக்கள் மன்ற நிவாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் நடந்து வந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடிந்து விட்டு , மே மாதம் சென்னை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முழு உடல் பரிசோதனைக்காக மத்திய அரசின் அனுமதி பெற்று கடந்த மாதம் 19 ஆம் தேதி அமெரிக்கா பறந்தார். அங்கு சில நாட்கள் தன்னுடைய மகளுடன் தங்கி சிகிச்சை பெற்ற பின்னர், நேற்றைய தினம் அதிகாலை 3 :30 மணியளவில் சென்னை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் உச்சாக வரவேற்பு கொடுத்தனர். 

rajinikanth arrange meeting for makkal manram members on Monday

சென்னை வந்த பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீர் என தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கள் கிழமை, நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் போன் கால் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறதாம்.

rajinikanth arrange meeting for makkal manram members on Monday

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் கால் பதித்து சட்ட மன்ற தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்த்த நிலையில் திடீர் என உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனால் இவர் அரசியல் கட்சி துவங்குவார் என எதிர்பார்த்த பலர் ஏமாற்றம் அடைத்தனர். அரசியல் பணிகளை மேற்கொள்ளாவிட்டாலும் தன்னுடைய மக்கள் மன்றம் மூலம், பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் திடீர் என ஆலோசனை கூட்டம் மேற்கொள்ள காரணம் என்ன என்பது குறித்து வரும் திங்கள் கிழமை அன்று தெரியவரும். 

Follow Us:
Download App:
  • android
  • ios