இந்த வருட 2020 பொங்கல் லிஸ்டில், தர்பார், பட்டாஸ், சுமோ, பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றிருந்தாலும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள 'தர்பார்' படத்திற்கும், பிரபு தேவா நடித்திருக்கும் 'பொன்மாணிக்க வேல்' படத்திற்கும் ஏதேர்ச்சியாகவே ஒரு ஒற்றுமை அமைந்துள்ளது.

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'தர்பார்' படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதே போல் நடிகர் பிரபுதேவாவும், 'பொன்மாணிக்க வேல்' படத்தில் மிரட்டல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

பல வருடங்களுக்கு பின் சூப்பர் ஸ்டார், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதால், தர்பார் படத்தின் மீது ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்புகள் உள்ளதே, அதே அளவிற்கு பிரபு தேவா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள 'பொன் மாணிக்கவேல்' படத்தையும் பார்க்க வேண்டும் என பல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள்.

எனவே இந்த பொங்கல், தித்திக்கும் பொங்கலாக மட்டும் அமையாமல் சூப்பர் ஸ்டார் மற்றும் பிரபுதேவா ரசிகர்களுக்கு ஆக்ஷன் அதிரடி பொங்கலாகவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.